புதிதாக திறன்பேசி வாங்கியிருக்கும் தங்கைக்கு, திறன்பேசி பயன்பாடு குறித்த அறிவுரைகளைக் கூறி கடிதம் ஒன்று எழுதுக. - Kalvi Mini

kalviMini,Kalvimini.com,kalvimini quarterly exam question paper 2025,half yearly exam question paper 2025

புதிதாக திறன்பேசி வாங்கியிருக்கும் தங்கைக்கு, திறன்பேசி பயன்பாடு குறித்த அறிவுரைகளைக் கூறி கடிதம் ஒன்று எழுதுக.

 புதிதாக திறன்பேசி வாங்கியிருக்கும் தங்கைக்கு, திறன்பேசி பயன்பாடு குறித்த அறிவுரைகளைக் கூறி கடிதம் ஒன்று எழுதுக.

தங்கைக்குக் கடிதம்

15,தெற்கு வீதி,

மதுரை-1,

24-03-2025.

அன்புள்ள தங்கைக்கு,

      உன் அன்பு அண்ணன் எழுதும் கடிதம். நான் இங்கு நலமாக உள்ளேன். உன் நலத்தையும், அம்மா,அப்பா, தாத்தா, பாட்டி அனைவருடைய  நலத்தையும் அறிய அவா.நீ எவ்வாறு படிக்கிறாய்? உன்னுடைய கூடைப்பந்து பயிற்சி எல்லாம் எப்படி இருக்கிறது?.திறன்பேசி அதிகமாகப் பயன்படுத்துவதாக அப்பா கூறினார். திறன்பேசியினால் நன்மையும் உண்டு; தீமையும் உண்டு. படிப்பிற்காக இணையத்தைப் பயன்படுத்தும்போது,இலவசஇணைப்பு போல்,தேவையற்ற விளம்பரங்களும், காட்சிகளும் உன்னைக் கவரும். அவற்றை விலக்கி விட்டு,படிப்பில் மட்டும் கவனம் செலுத்தி,கல்வியில் உயர்நிலையை அடைய முயலவும். அப்பா அம்மா சொல்வதைக் கேட்டு நல்ல பெண் என்று பெயர் எடுக்க வேண்டும். அடுத்த மாதம் விடுமுறையில் வரும்போது நேரில் பேசலாம்.

                                                            இப்படிக்கு

                                                        உன் அன்பு அண்ணன்

                                                           நாகபாணடி.

 உறைமேல் முகவரி:

ஆனந்தி,

கோழிப்பட்டி,

மதுரை- 625537



இதையும் படிக்கவும் .